வள்ளி மலை கோவிலில் கிருத்திகை சிறப்பு பூஜை

74பார்த்தது
காட்பாடி தாலுகா வள்ளிமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு மலை மேல் சுப்பிரமணிய நாதராகவும் மலையடிவாரத்தில் ஆறுமுகநாதன் ஆகவும் மூலவர்கள் வீற்றிருக்கின்றனர். இங்கு கிருத்திகை பிரதோஷம் மற்றும் பௌர்ணமி உள்ளிட்ட நாட்களில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று சித்திரை மாத கிருத்திகை தினத்தை ஒட்டி வழிமலை தேரடியில் உள்ள வர சித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. இதனைத் தொடர்ந்து மலைக்கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு துளசி மலர்களால் வெள்ளிக்கிழச அலங்காரத்திலும் மலை அடிவாரத்தில் தனி சன்னதியில் வீற்றியிருக்கும் வள்ளியம்மை சிறப்பு அலங்காரத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அடிவாரத்தில் உள்ள வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகநாதர் வெள்ளி கவச விபூதி காப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார் காலை முதலில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வள்ளி தெய்வானை சமய சுப்பிரமணியர் மற்றும் ஆறுமுகநாதரை தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி