எம்பியாக டெல்லிக்கு அனுப்ப வேண்டும் என கதிர் ஆனந்த் பேச்சு

73பார்த்தது
வேலூர் மக்களவைத் தொகுதிகுட்பட்ட ஜாப்ராபேட்டை, வஞ்சூர் பகுதியில் வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சார வாகனம் மூலம் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பிரச்சாரம் வாகனத்தில் நின்றவாறு பொது மக்களுக்கு மத்தியில் பேசிய கதிர் ஆனந்த்

ஒரு சவரன் தங்கம் 52 ஆயிரம் விற்கிறது
விலைவாசியால் இந்தியாவே அல்லல்படுகிறது.
இன்று கேஸ் சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது. மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் 2000 ருபாய்க்கு வந்துவிடும்.
100 நாள் வேலை திட்டத்தை படி படியாக தமிழ்நாடை எடுக்க முயற்சி செய்து வருகிறார் பிரதமர் மோடி.
தேர்தலில் வெற்றி பெற்றதும் நம் முதலமைச்சர் 100 வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தி காட்டுவார்.

1000 ருபாய் திட்டத்தில் இன்னும் யார்யாருக்கு 1000 ருபாய் வரவில்லையோ தேர்தலுக்கும் பின் முகாம் நடத்தி குறைகள் நிவர்த்தி செய்யப்படும்.

உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்தால் கல்வி கடன் விவசாய கடன் மகளிர் சுய உதவிக் குழுக்கள் கடன் ஆகியவற்றை தள்ளுபடி செய்வேன் என கூறியுள்ளார். இந்த நாட்டை காப்பாற்ற உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களித்து என்னை மீண்டும் எம்பியாக டெல்லிக்கு அனுப்ப வேண்டும்.

இந்த பகுதிக்கு தேவையான வசதிகளை எல்லா செய்து தருவேன் என‌ பேசினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி