95வயது வரை நோய் நொடியின்றி வாழ வைப்பேன் - ஏசி. எஸ் வாக்குறுதி

57பார்த்தது
95வயது வரை நோய் நொடியின்றி வாழ வைப்பேன் - ஏசி. எஸ் வாக்குறுதி
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஏசி சண்முகம் ஆம்பூர் பஜார் சம்பங்கி அங்காடி, ஆம்பூர் பைபாஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் இரவு வேளையில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய பாஜக வேட்பாளர் ஏசி சண்முகம், "என்னை இங்கிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக டெல்லிக்கு அனுப்புங்கள். நான் அங்கிருந்து மத்திய அமைச்சராக பொறுப்பேற்று இங்கு வந்து உங்களை சந்திப்பேன்.

மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களைப் போல, மற்ற அமைச்சர்களைப் போல நான் இருக்க மாட்டேன். ஏசி சண்முகம் சிறந்த நபராக இருக்கிறார் என்ற பெயரை வாங்குவேன். எனக்கு தெரியும் கடைசி நாளில் நான் கட்டியிருக்கும் இந்த வாட்ச் கூட என் கூட வராது. நாம் செய்கின்ற பாவம் புண்ணியம் தான் கூட வரும்.

என்னுடைய தாய் 47 வயதில் இறந்து விட்டார். ரத்த அழுத்தம் குறைபாடு காரணமாக உயிரிழந்த நிலையில், அவரை நான் பார்த்துக் கொள்ள தவறிவிட்டேன். அதுபோல உங்களுக்கு ஆக விடமாட்டேன். அனைவரையும் 95 வயது வரை நோய் நொடி இன்றி வாழ உதவி செய்வேன். நான் உங்கள் அனைவரையும் எனது சகோதரி போல பார்த்துக் கொள்வேன். இது கேரன்டி என உருக்கமாக பேசி வாக்குகளை சேகரித்தார்.

தொடர்புடைய செய்தி