தமிழக எல்லையோர டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

74பார்த்தது
வேலூர் மாவட்டம்

ஆந்திர மாநிலத்தில் தேர்தலை முன்னிட்டு தமிழக எல்லையோர டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

ஆந்திர மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தல் நாளை (திங் கட்கிழமை) நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தமிழக எல்லையோர பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறையை டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனையடுத்து காட்பாடி அடுத்த பொன்னை, பெருமாள்குப்பம், சேர்க்காடு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு 11-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை 3 நாட்கள் அதாவது நேற்று முதல் நாளை வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க டாஸ்மாக் நிர்வாகம் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்தி