வீர மரணமடைந்த CRPF வீரருக்கு மரியாதை செய்த CRPF டிஐஜி!

74பார்த்தது
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பல்வேறு காலகட்டங்களில் வீர மரணம் அடைந்த CRPF வீரர்களின் குடும்பத்துக்கே சென்று மரியாதை செலுத்தும் திட்டமான "ஷஹீத் கோ நமன்" என்ற திட்டம் கடந்த மார்ச் மாதம் முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் வேலூர் மாவட்டம் பென்னாத்தூரை சேர்ந்த CRPF ல் 113 வது படைப்பிரிவில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்த வேலு என்பவர் 1998 ம் ஆண்டு ஜீன் 10 ம் தேதி ஆந்திர மாநிலம் பசாராவில் நடந்த மாவோயிஸ்டுகளின் குண்டு வெடிப்பு தாக்குதலில் உயிரிழந்தார்.

இந்நிலையில் இன்று வீர மரணம் அடைந்த வேலுவுக்கு 25 வது ஆண்டு நினைவு கூறப்பட்டு வருகிறது. இவரனினன் வீரத்தை போற்றும் வகையில் வேலுவின் சொந்த ஊரான பென்னாத்தூரில் CRPF சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஆவடி CRPF, DIG தினகரன் கலந்துகொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.