காட்பாடியில் விமர்சையாக நடந்த எருது விடும் திருவிழா

79பார்த்தது
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருமணி பகுதியில் வெகு விமர்சையாக நடைபெற்ற எருது விடும் திருவிழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருமணி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் மயான கொள்ளை திருவிழாவை முன்னிட்டு நேற்று எருது விடும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் வேலூர் திருப்பத்தூர் கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் அண்டை மாநிலமான ஆந்திராவில் இருந்தும் சுமார் 150-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து ஓடின.

இதில் குறைந்த நேரத்தில் இலக்கை எட்டிய காளையின் உரிமையாளருக்கு முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாயும், இரண்டாவது பரிசாக 75 ஆயிரம் ரூபாயும், மூன்றாவது பரிசாக ஐம்பதாயிரம் ரூபாய் என மொத்தம் 50 காளைகளில் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

மேலும் காளைகள் முட்டியதில் பத்துக்கும் மேற்பட்டோருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டு அங்கே இருந்த மருத்துவ குழுவினர் மூலம் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த எருது விடும் திருவிழாவை காண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்திருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி