காட்பாடி ரயில் நிலையம் அருகே பற்றி எரிந்த தீ

60பார்த்தது
வேலூர் மாவட்டம்

காட்பாடி ரயில் நிலையத்தில் ஏடிஎம் அருகே உள்ள குப்பை தீப்பிடித்து எறிந்தது விரைந்து வந்து அனைத்த காட்பாடி தீயணைப்பு துறையினர்

வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்வது வழக்கம் பயணிகளின் வசதிக்காக ரயில் நிலையம் வெளியே இரண்டு ஏடிஎம் மையங்கள் இயங்கி வருகின்றன இதன் அருகே குப்பைகள் கொட்டப்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது இந்த குப்பைகள் ஆனது இன்று திடீரென தீப்பிடித்து மணமளவனை எரிந்தது இதனைக் கண்ட ஆட்டோ ஓட்டுநர்கள் உடனடியாக காட்பாடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர் தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த பால்பாண்டி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீய்ச்சு அடித்து குப்பைகளில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர் இதனால் அருகில் இருந்த ஏடிஎம் இயந்திரம் தீ பற்றாமல் தப்பித்தது குறிப்பிடத்தக்கது

மேலும் இந்த இடத்தில் மீண்டும் குப்பைகளை கொட்ட வேண்டாம் என அங்கு இருந்தவர்களுக்கு தீயணைப்பு துறையினர் அறிவுரை வழங்கி சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி