நாட்றம்பள்ளி அருகே கொளுந்து விட்டு எரியும்..வீடியோ!

3994பார்த்தது
நாட்றம்பள்ளி அருகே மலைப்பகுதியில் மர்ம நபர்கள் தீவைத்து கொளுத்தியதால் பாம்பு குரங்கு உள்ளிட்ட வன விலங்குகள் ஊருக்குள் புகுந்துவிடும் என பொதுமக்கள் அச்சம்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்ரம்பள்ளி அடுத்த அக்ரஹாரம் குட்டை மலைப்பகுதியில் மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தியதால் கொழுந்து விட்டு எரியும் காட்டு தீயால் அங்குள்ள பாம்புகள் குரங்குகள் உள்ளிட்ட வனவிலங்குகள் பாதுகாப்பு கருதி பொதுமக்கள் வசிக்கும் ஊருக்குள் நுழைந்து விடுமோ என பொதுமக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி காடுகளில் இருக்கும் மரங்கள் செடிகள் மர்ப நபர்களின் கைவரிசையால் தீயில் கருகி வணத்தின் தன்மை அழிந்து விடக்கூடிய அபாயம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

எனவே வனத்துறை அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி