திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் புள்ளானேரி ஊராட்சி, புரத்தான் வட்டம் செல்லும் ஏரிக்கரை சாலை பகுதியில் நிதி ஒதுக்கி பல ஆண்டுகள் ஆகியும் சாலை போடாமல் உள்ளது. இங்கு ஏறக்குறைய 60 குடும்பங்களுக்கு மேல் உள்ளது. ஏரி மண் தூர் வாரிய பின்பும் சாலை அகலப்படுத்தாமல் உள்ளது, ஏரி மண் என்ன ஆனது என்று தெரியவில்லை. கூலி வேலைக்கு செல்லும் ஆணும், பெண்ணும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். தெரு விளக்கும் சரிவர இல்லை. ஆகையால் சாலை போட்டு தருமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.