உலர் பழங்கள் கொண்டு ஏலகிரியில் பிரம்மாண்ட கேக் தயாரிப்பு

80பார்த்தது
*நெருங்கி வரும் கிறிஸ்மஸ் காரணமாக ஏலகிரி மலையில் பிரம்மாண்ட கேக் தயாரிக்க உலர் பழங்கள் மற்றும் ஆல்கஹால் ஊற்றி ஊரல் திருவிழா*

திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரிமலை அடுத்த பள்ளக்கனியூர் பகுதியில் உள்ள தனியார் சொகுசு ஓட்டலில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு லிக்கர் கேக் தயாரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

17ம் நூற்றாண்டில் பிரிட்டன் நாட்டில் லிக்கர் கேக் அறிமுகம் ஆன நிலையில் இதனை பல்வேறு நாடுகளில் கடைப்பிடிப்பதாகவும் அதே போல் திருப்பத்தூர் மாவட்டத்தில் முதன்முறையாக உலர் பழங்கள் பயன்படுத்தி 50 கிலோ அளவிலான லிக்கர் கேக் தயாரிக்க திட்டமிட்டு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே ஊறல் போட வேண்டும் என்பதால் தனியார் சொகுசு ஹோட்டலில் உலர் பழங்கள் மற்றும் ஆல்கஹால் கொண்டு லிக்கர் கேக் மிக்சிங் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பெண்கள், குழந்தைகள், வாடிக்கையாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி