திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டி பகுதியில் வசிப்பவர்கள் சந்திரசேகர் இவரது மனைவி உஷா இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ள நிலையில் கணவர் சந்திரசேகர் மது போதைக்கு அடிமையாகி ஓட்டுனர் தொழிலை விட்டுவிட்டு சிறிது காலமாக மனைவி உஷாவை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் உஷா ஜோலார்பேட்டையில் இருந்து ஆம்பூர் சென்று அங்கிருக்கும் பிரபல ஜவுளி கடையில் வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் ஜோலார்பேட்டை அடுத்த லக்கனம்பட்டி பகுதியில் இயங்கும் இருபாலர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இவர்களது மூத்த மகள் ரிஷிதா ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய மாணவி ரிஷிதா வீட்டின் பால்கனிக்கு சென்று அங்கிருந்த ஊஞ்சலை கழட்டி வைத்துவிட்டு கீழே இருந்த புடவையை கட்டி அதில் பள்ளி சீருடையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை வீட்டின் அருகே நடை பயிற்சி மேற்கொண்ட நபர் ஒருவர் பார்த்து பெற்றெருக்கு சொல்ல பதறிய அவர்கள் ரிஷிதாவை மீட்டு கதறி அழுத நிலையில் சம்பவம் அறிந்த ஜோலார்பேட்டை காவல் துறை சடலத்தை மீட்டு திருப்பத்தூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.