வீரமணி வீட்டிற்கு மேளதாளத்துடன் நடனமாடி புத்தாண்டு வாழ்த்து

66பார்த்தது
முன்னாள் அமைச்சர் வீரமணியின் வீட்டிற்கு மேலதாளத்துடன் நடனமாடி சென்று சால்வை அணிவித்து கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடிய அதிமுக தொண்டர்கள்*

2023 ஆம் ஆண்டு கடந்து 2024ஆம் ஆண்டு துவங்கிய நிலையில் உலகம் முழுவதும் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த இடையம்பட்டி பகுதியில் வசிக்கும் முன்னாள் அமைச்சர் கே சி வீரமணியின் வீட்டிற்கு நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்றனர். அப்போது மேளதாத்திற்கு முன்பாக சுமார் பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் வழிநெடுகிலும் நடனமாடி சென்ற நிகழ்ச்சியை பொதுமக்கள் உற்சாகமாக வேடிக்கை பார்த்தனர்.

இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் வீரமணிக்கு சால்வை மற்றும் மலர் மாலை அணிவித்து அதன் பிறகு கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர். பின்பு தன்னை பார்க்க வந்த தொடர்களுக்கு 2024 ஆம் ஆண்டு காலண்டர் பரிசாக வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி