திமிரி: ஆட்சியர் தலைமையில் கல்குவாரி கருத்து கேட்பு கூட்டம்
திமிரி அடுத்த நம்பரை கிராமத்தில் தனிநபர் ஒருவர் கல்குவாரி ஏலம் எடுக்க ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அதைத் தொடர்ந்து இன்று பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வருவாய் துறையினர் கூட்டத்தில் பங்கேற்றனர்.