சோளிங்கர் அருகே சாலையை விரைந்து அமைக்க மக்கள் கோரிக்கை
சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட பாண்டியநல்லூர் செல்லும் சாலையில் அண்ணாமலை நகர் உள்ளது. இங்கு மின்விளக்கு, கழிவுநீர் கால்வாய், சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் நகராட்சி நிர்வாகம் அப்பகுதிக்கு கழிவுநீர் கால்வாய் அமைத்தது. மேலும் சிமெண்ட் சாலை அமைக்காமல் சாலையில் உடைக்கப்பட்ட செங்கல் போடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, சிமெண்ட் சாலையை விரைந்து அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.