ஆற்காடு தாலுகா திமிரியை அடுத்த ரஞ்சித்குமார் தராமி கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித்கு மார் (வயது 24). இவரது நண்பர்கள் பரதராமியை அடுத்த மேட்டுகுடிசை பகுதியை சேர்ந்த கார்த்திக்ராஜா (21), சரத்குமார் (21). இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் வேலூருக்கு சென்று சினிமா பார்த்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு செல்வதற்காக ஆற்காடு நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
ஆற்காடு அருகே உள்ள ரத்தினகிரியை அடுத்த தென்நந்தியாலம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த கார் திடீரென அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதனால் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் அந்த பகுதியில் உள்ள மரத்தில் மோதி தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் ரஞ்சித்குமாரின் உடல் இரண்டு துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த கார்த்திக்ராஜா, சரத்குமார் ஆகிய இருவரும் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகா பச்சூர் பகுதியை சேர்ந்த தமிழரசன் என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.