லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து சிதறிய மது பாட்டில்கள்!

1560பார்த்தது
வேலூர் டாஸ்மாக் குடோனிலிருந்து வாணியம்பாடி மற்றும் நாட்றம்பள்ளி பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு 790 கேஸ் (அட்டைப்பெட்டிகளில்) 38 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை ஏற்றி சென்ற மினிலாரி ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் லாரியில் கொண்டு செல்லப்பட்ட மதுபாட்டில்கள் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உடைந்து சிதறி கிடந்த மது பாட்டில்களை அப்பகுதி மக்கள் சிலர் மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் செல்வோர் கூட்டம் கூடி எடுத்துச் செல்ல முயன்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பொதுமக்கள் மது பாட்டில்கள் எடுத்துச் செல்வதை ஓட்டுனர் மற்றும் அங்கிருந்த இளைஞர்கள் தடுத்து நிறுத்தி ஆம்பூர் கிராமிய காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர் தகவலின் பேரில் ஆம்பூர் கிராமிய காவல்துறையினர சம்பவ இடத்திற்கு சென்று மது பாட்டில்களை பொதுமக்கள் கொண்டு செல்லாத வண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு சாலையில் கொட்டிக் கிடந்த மது பாட்டில்களை அப்புறப்படுத்தி போக்குவரத்து சீர் செய்தனர்.

தொடர்புடைய செய்தி