புத்தாண்டையொட்டி, வேலூர் மாவட்டத்தில் 940 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இன்று இரவு பொது இடங்களில் கூடுவதை மக்கள் தவிர்க்கவும். நள்ளிரவு 1 மணிக்குமேல் கொண்டாட்டங்களுக்கு அனுமதி கிடையாது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்பி மணிவண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.