வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேப்பம்பட்டு, துத்திக்காடு, செதுவாலை, பொய்கை, சமத்துவபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின வகுப்பைச் சார்ந்த இருளர் இன மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாவுடன் கூடிய வீட்டு மனை தொகுப்பு அமைத்துத் தரக்கோரி பலமுறை அரசிற்கு கோரிக்கை வைத்தும், இதுவரை நிறைவேற்றப்படாததால் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு சுமார் 80 க்கும் மேற்பட்டோர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் விடுதலைக் கட்சி சார்பில் பழங்குடி நம் மக்கள் கருணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் கோட்டாட்சியர் பாலசுப்ரமணியன் இரண்டு நாட்களில் ஆய்வு செய்து தகுதியானவர்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த நிலையில் போராட்டம் கைவிடப்பட்டது.
ஏற்கனவே வரும் 14 ஆம் தேதி, முதல் கட்டமாக 14 பேருக்கு உங்கள் ஊரில் உங்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கோட்டாட்சியர் தெரிவித்தார்.