திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் மின்னூர் ஊராட்சி பகுதியில் கம்பளி மில் தற்போது சிப்காடாக மாற்றப்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளது. இந்த இடம் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது பல்வேறு தொழிற்சாலைகள் சிப்காட் மூலம் வரவுள்ளது. விரைவில் திறக்கப்பட்டால் பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது. தமிழக அரசு உடனடியாக சிப்காட்டை திறந்து வைக்க சமூக அலுவலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.