திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள எலவம்பட்டி பகுதியில் (ஆர். டி ஓ)வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் (இன்று அக்டோபர் 23 மாலை ) திருப்பத்தூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை இன்ஸ்பெக்டர் கௌரி தலைமையிலான போலீசார் குழு திடீரென அலுவலகத்தில் புகுந்து சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த பகுதியில் இருந்த மோட்டார் வாகன தரகர்கள் மற்றும் ஊழியர்கள் தப்பி ஓட்டம். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.