ஆம்பூர்: மதுவிற்ற வாலிபர் கைது!

62பார்த்தது
ஆம்பூர்: மதுவிற்ற வாலிபர் கைது!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் போலீசார் கன்னிகாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் விற்பனைக்காக மதுபாட்டில்களை கொண்டு சென்றது தெரிய வந்தது.

அதைத் தொடர்ந்து போலீசார் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, ஆம்பூரை அடுத்த துத்திப்பட்டு பகுதியை சேர்ந்த மதுரகவி (25) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி