ரியல் மாட்ரிட் கிளப் அணியுடன் இணைந்தார் எம்பாப்பே

58பார்த்தது
ரியல் மாட்ரிட் கிளப் அணியுடன் இணைந்தார் எம்பாப்பே
பிரான்ஸ் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் கிலியான் எம்பாப்பே கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த லீக்-1 சீசனோடு பி.எஸ்.ஜி. அணியில் இருந்து வெளியேற இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதையடுத்து அவர் ரியல் மாட்ரிட் கால்பந்து கிளப் அணியில் இணைய அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் கிலியான் எம்பாப்பே ரியல் மாட்ரிட் கால்பந்து கிளப் அணியில் இணைந்ததாக இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதுகுறித்த புகைப்படமும் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி