வாகன நுழைவு கட்டணம் ரத்து

57பார்த்தது
வாகன நுழைவு கட்டணம் ரத்து
ஜனவரி.26ல் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலா தலங்களை காண வாகன நுழைவு கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. குடியரசு தின விழாவை முன்னிட்டும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ரத்து செய்யப்படுகிறது. ஜனவரி.26ல் மோயர் பாயிண்ட், பைன் மரச்சோலை, பில்லர் ராக், குணா குகைக்கு இலவசமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், நான்கு நாட்கள் தொடர் விடுமுறை என்பதாலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும். அவர்களுக்கு இந்த சலுகை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தொடர்புடைய செய்தி