வேங்கை மரம் இந்தியா, நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளை தாயகமாக கொண்டது. இதன் அனைத்துப் பகுதிகளும் மருத்துவ குணம் உடையவை. வேங்கை மரத்தின் இலையையும், பூவையும் உடம்பில் தொடர்ந்து பூசிக் குளித்து வந்தால், கொழுப்புக் கட்டிகள் கரையும். வேங்கை மரத்தின் பட்டையில் உள்ள வேதிப்பொருட்கள் சர்க்கரை நோயை குணப்படுத்தும் வல்லமை கொண்டது. வேங்கை மரப்பட்டை இரும்புச்சத்து தொடர்பான மருந்துகளில் சேர்க்கப்படுகிறது.