வெளியானது வடக்குப்பட்டி ராமசாமி ட்ரெய்லர்

63பார்த்தது
வெளியானது வடக்குப்பட்டி ராமசாமி ட்ரெய்லர்
சந்தானம் நடிப்பில் டிக்கிலோனா படத்தை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள "வடக்குப்பட்டி ராமசாமி" படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடிகை மேகா ஆகாஷ் நடித்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு ஓடிடி இல் வெளியான டிக்கிலோனா திரைப்படம் ரசிகர்களை குறிப்பிட்ட சில நகைச்சுவை காட்சிகளால் மிகவும் கவர்ந்தது. அந்த வகையில், இந்த படமும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் என ட்ரெய்லரை பார்க்கும்போது தெரிகிறது. படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது. படம் பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாகிறது.

தொடர்புடைய செய்தி