இந்தியாவின் சுதந்திர போராட்ட வரலாற்றில் ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் ரத்தத்தால் எழுதப்பட்ட சரித்திரம். இந்த படுகொலைகளை நிகழ்த்திய துணை ஆளுநர் மைக்கல் ஓ'ட்வையரை ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் நடந்து 21 ஆண்டுகளுக்குப் பின்னர் சுட்டுக்கொன்றவர் உத்தம் சிங். அதற்காக உத்தம் சிங் தூக்கு கயிறை முத்தமிட்டார். அன்றைய பிரதமர் நேரு 1962-ல் உத்தம் சிங்கின் செயலைப் பாராட்டி இவர் போன்றவர்களால்தான் இந்தியா சுதந்திரம் அடைந்தது என்று கூறினார்.