பிரச்சாரத்துக்கு கிளம்பிய உதயநிதி.. ஆரம்பமே இங்கயா?

80பார்த்தது
பிரச்சாரத்துக்கு கிளம்பிய உதயநிதி.. ஆரம்பமே இங்கயா?
மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தை திருச்சியில் நேற்று(மார்ச்22) தொடங்கினார். இந்த நிலையில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வேட்பாளர்களை ஆதரித்து இன்று(மார்ச்23) தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். மத்திய சென்னை தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து இன்று காலை உதயநிதி ஸ்டாலின் தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.

தொடர்புடைய செய்தி