சூடு பிடிக்கும் ஐபிஎல் - இன்று நடைபெறும் இரண்டு போட்டிகள்

52பார்த்தது
சூடு பிடிக்கும் ஐபிஎல் - இன்று நடைபெறும் இரண்டு போட்டிகள்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் நேற்று (மார்ச் 22) விளையாடின. இதில் சிஎஸ்கே அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று(மார்ச்23) ஐபிஎல் தொடரில் இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. பஞ்சாபில் உள்ள மைதானத்தில் வைத்து மதியம் 3.30 மணி அளவில் முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதவுள்ளன. கொல்கத்தாவில் வைத்து மாலை 7.30 மணியளவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.