“உதயநிதி வெற்றி பெற வேண்டும்” - கமல் பேச்சு

61பார்த்தது
“உதயநிதி வெற்றி பெற வேண்டும்” - கமல் பேச்சு
‘இந்தியன் 2’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் கமல்ஹாசன், உதயநிதி குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, “இந்தியன்-2 படம் சிக்கலில் மாட்டி 2, 3 வருடமாக நகராமல் இருந்தபோது, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உதவியதால் இந்த படம் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தது. எங்களுக்கு உறுதுணையாக இருந்த உதயநிதிக்கு மக்கள் வேறு பொறுப்பு கொடுத்திருக்கிறார்கள், அந்த பொறுப்பில் அவர் வெற்றி பெற வேண்டும். எங்களுக்கு அவர் உறுதுணையாக இருந்தது போல், அவரோடு நாங்களும் உறுதுணையாக நிற்க வேண்டிய சூழல் வரும்” என்றார்.

தொடர்புடைய செய்தி