இந்திய பங்குச்சந்தைகள் வரலாறு காணாத உச்சத்தில் வர்த்தகமாகின்றன. அதன்படி, மும்பை
பங்குச்சந்தை சென்செக்ஸ் 250 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 67,700 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. மேலும், தேசிய
பங்குச்சந்தை நிஃப்டி 90 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து 20,150 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை டாடா ஸ்டீல், டெக் மகேந்திரா, ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், விப்ரோ, எம் அண்ட் எம், மாருதி சுசூகி, நெஸ்ட்லே
இந்தியா, பவர் கிரிடு கார்ப்பரேஷன், இன்போசிஸ், டாடா மோட்டார்ஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ் உயர்வில் இருந்தது.