McGill பல்கலைக்கழகம் சமீபத்தில் ஒரு ஆய்வு அறிக்கையை தனது X வலைத்தளம் வழியாக வெளியிட்டது. இந்த ஆய்வில் ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகியுள்ள முதல் 5 நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி சீனா, சவூதி அரேபியா, மலேசியா, பிரேசில், தென் கொரியா ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன. ஸ்மார்ட்போன் உபயோகத்தில் முதல் பத்து நாடுகளில் கூட இந்தியாவின் பெயர் இல்லை. ஸ்மார்ட்போன் உபயோக பட்டியலில் 17-வது இடத்தில் இந்தியா உள்ளது.