தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்று மக்கள் அறிந்துகொள்ள உதவும் விவிபாட் இயந்திரங்களை அதிகப்படுத்த காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக பேசிய ஜெயராம் ரமேஷ், தேர்தலில் 100 சதவீத விவிபாட் இயந்திரங்களை அனுமதிக்க தேர்தல் ஆணையம் தயங்குவது, இன்னும் அதிக கேள்விகளை எழுப்புகிறது. முழுமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட தொழில்நுட்ப விஷயத்தில் தேர்தல் ஆணையம் அதிக பொறுப்புடனும், வெளிப்படைத்தன்மையுடனும் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.