மேஷம்: இன்று எதிர்பார்த்த பணம் வந்து சேரும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். முதியவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்படும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு வேண்டும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும் சூழல் உருவாகும்.
ரிஷபம்: இன்று நீங்கள் செய்யாத தவறுக்கு உங்களை சிக்க வைக்க யாரேனும் முயற்சிப்பார்கள். எனினும் உங்களது சாதுர்யத்தால் அனைத்து பிரச்சனைகளையும் சமாளித்துவிடுவீர்கள். உறவினர் வகையிலும் கூட ஒருவருடன் மனஸ்தாபம் உருவாகலாம். அதீத எதிர்பார்ப்புகள் வேண்டாம்.
மிதுனம்: இன்று இயந்திரங்களை இயக்கும் போது கவனம் தேவை. வாழ்க்கைத் துணையுடன் சின்ன சின்ன கருத்து மோதல்கள் வந்து மறையும். வீண் செலவுகளை தவிர்க்க வேண்டும். நண்பர்கள் மூலம் நன்மை ஏற்படும். அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும்.
கடகம்: இன்று தங்களது முழு திறனையும் பயன்படுத்தினால் வெற்றி அடையலாம். குழந்தைகளுக்கு உடல்நலம் பாதிக்கப்படும். கணவன் - மனைவியிடையே கருத்து மோதல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. பேச்சிலும் செயலிலும் கவனம் தேவை. வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும்.
சிம்மம்: இன்று கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற புகழும், கௌரவமும் கட்டாயம் கிடைக்கும். பண வரவில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் மூலம் தக்க சமயத்தில் தேவையான உதவிகளைப் பெறுவீர்கள். அமைதியாகச் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். பண விரயங்களும் அவ்வப்போது உண்டாகும் என்பதால் சேமிப்பு விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.
கன்னி: இன்று புதிய வீடு, வாகனம், ஆடை, ஆபரணங்களை வாங்குவீர்கள். நண்பர்களிடம் மன உறுதியுடன் தெளிவாகப் பேசுவீர்கள். உங்களைப் பற்றிப் புறம் பேசும் நபர்களை அடையாளம் கண்டு, அவர்களிடமிருந்து நாசூக்காக விலகி விடவேண்டும். உடல்நலனில் அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள்.
துலாம்: இன்று கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் குறையும். தடைகள் ஏற்பட்டாலும் இறுதியில் அனைத்துச் செயல்களிலும் வெற்றியடைவீர்கள். வாடிக்கையாளர்களைக் கவர, புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தினாலும் கடன் சுமை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
விருச்சிகம்: இன்று வீட்டில் சுபநிகழ்ச்சிகள் இனிதே நிறைவேறும். பெரும் பொருள் வரவை எதிர்பார்க்கலாம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த செல்வம் உங்களிடம் வந்து சேரும். விலகிச் சென்ற சொந்த பந்தங்கள் உங்களிடம் வந்து சேருவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும்.
தனுசு: உங்கள் குடும்பத்தில் நடைபெற இருந்த நற்காரியங்கள் ஒவ்வொன்றாக நடைபெறும். நண்பர்கள் அனுகூலமாக இருப்பர்கள். முடிந்தவரை அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிருங்கள். பெரியோர்களை ஆலோசனைகளைக் கேட்டே எதையும் செய்வது நல்லது. தம்பதிகளிடம் கருத்து வேறுபாடு ஏற்படும்.
மகரம்: இன்று தெய்வ காரியங்களை மேற்கொள்வதில் சில சிக்கல்கள் வராமல் இருக்க குலதெய்வ கோயிலுக்கு சென்று வந்தால் நன்மை உண்டாகும். சில வேளைகளில் வேலைப்பளு காரணமாக உணவு சரியான நேரத்தில் உட்கொள்ள முடியாமல் போகலாம். பரம்பரை சொத்தில் இருந்து வந்த பிரச்சனைகளுக்கு சுமூகமான முடிவு வந்து சேரும். விரைவில் உங்களுக்கு திருமணம் நடைபெறும் வாய்ப்பு உள்ளது.
கும்பம்: இன்று புதிய சொத்துக்கள் வாங்க நேரம் கைகூடி வரும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். ஆனால் அதற்காக சிலர் கடன் வாங்க வேண்டி வரலாம். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும்.
பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை தங்கு தடையின்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். பண வரவு திருப்திகரமாக இருக்கும்.
மீனம்: இன்று பொழுதுபோக்கான விஷயங்களில் கலந்து கொள்வீர்கள். உங்களை விட்டுப் பிரிந்த நண்பர்கள் உங்களை புரிந்துகொள்வார்கள். சிலருக்கு தலைவலி, உடல்வலி ஏற்படும். வெளியூர் பயணம் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும்.