மேஷம்: இந்த ராசியில் பிறந்தவர்கள் இன்று உங்களின் அதிகபட்ச ஆற்றலைப் பயன்படுத்துவீர்கள். அது உங்கள் அன்றாட பணியில் பிரதிபலிக்கும். இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான நாளாக அமையும் நல்ல நாள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். உங்கள் இலக்குகளை நீங்கள் எளிதில் அடைவீர்கள். குடும்ப சுபகாரியங்களில் முன்னேற்றம் ஏற்படும்.
ரிஷபம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அனுகூலம் குறைந்து காணப்படும் நல்ல நாள். வெற்றியைப் பெற பொறுமையாக இருக்க வேண்டும். இன்று நீங்கள் சில தடைகளை சந்திக்க வாய்ப்பு உள்ளது. எனவே இன்று நீங்கள் செய்யும் அனைத்து வேலையையும் திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். காரியங்களை சாதிக்க கடின உழைப்பு தேவை.
மிதுனம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று முக்கிய
முடிவுகள் எடுக்க உகந்த நாள் இல்லை. தேவையற்ற விஷயங்களுக்கு பதட்டமடைவீர்கள். இதனை தவிர்த்து உற்சாகமாக இருக்க வேண்டும். இணக்கமான வாழ்க்கைத் துணையை கண்டுபிடிப்பது சாத்தியமாகும். மாணவர்கள் தாங்கள் விரும்பிய பாடத்தை மேற்படிப்புக்கு பெறலாம். வெளிநாட்டில் இருந்து நிதி ஆதாயம் எதிர்பார்க்கலாம்.
கடகம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றிகரமான நாளாக அமையும் நல்ல நாள். உங்களிடம் காணப்படும் மகிழ்ச்சி காரணமாக பணிகளை சுலபமாக முடிப்பீர்கள். உங்களிடம் அதிக ஆற்றல் மற்றும் விழிப்புணர்வு உங்களின் வெற்றிக்கு வழி வகுக்கும். தந்தையின் உதவியும் ஆதரவும் கிடைக்கும். பிரிந்த தம்பதியர் மீண்டும் இணைவார்கள்.
சிம்மம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று மன உளைச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால், இன்றூ நீங்கள் பாடல்கள் கேட்பது அல்லது திரைப்படங்கள் பார்ப்பது போன்ற நிகழ்சிகள் மூலம் மனதில் மகிழ்ச்சி ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இன்று நீங்கள் எடுக்கும் முக்கிய
முடிவுகள் எடுப்பதை கட்டாயமாக தவிர்க்க வேண்டும்.
கன்னி: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நற்பலன்கள் கூடுதலாக கிடைக்கும் நல்ல நாள். இன்று நீங்கள் எடுக்கும் முக்கிய
முடிவுகள் நல்ல பலன்களை அளிக்கும். சிறிய முயற்சிகள் கூட இன்று வெற்றியை அளிக்கும். திருமண விஷயத்தில் சாதகமான முடிவு எடுக்கப்படும். பயணங்களால் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும்.
துலாம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று கூடுதல் பொறுப்புகள் காரணமாக உங்கள் பணிகளை செய்வது சற்று கடினமாக இருக்கும். ஆனால், உங்களது நேர்மறை எண்ணம் மூலம் இன்றைய நாளை உங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ளலாம். நிதி பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்கவும். கருவுறுதலுக்காக காத்திருக்கும் தம்பதிகள் தடைகளை தாண்டி வெற்றி பெருவார்கள்.
விருச்சிகம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று வளர்ச்சியில் சில தடைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால், உங்களது உறுதியும் ஈடுபாட்டின் மூலம் தடைகளை வெற்றிப் படிகளாக்குங்கள். தம்பதியினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடன்பிறந்தவர்களால் மனக்கசப்பு ஏற்படும். விட்டுக்கொடுத்து செல்வது நன்மை.
தனுசு: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அனுகூலம் சற்று குறைந்து காணப்படும். நீங்கள் எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும். இன்று எதையோ இழந்தது போல உணர்வீர்கள். அரசியல்வாதிகள் பொதுவெளியில் பேசும்போது வார்த்தைகளை கவனமாகப் பயன்படுத்த வேண்டும். எல்லா விஷயங்களிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.
மகரம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும் நல்ல நாள். எதிர்பாராத விருந்தினர் வரகை உங்களுக்கு உற்சாகத்தை அளிக்கும். இதனால் இன்று மகிழ்ச்சி யாக இருப்பீர்கள். வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும். வேலையில்லாதவர்களுக்கு
வேலை கிடைக்க சாதகமான நேரம். எதிரிகளால் இருந்து வந்த குழப்பங்கள் தீரும்.
கும்பம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியுடன் இருக்க வேண்டும். இன்று நீங்கள் தைரியம் மற்றும் உறுதியுடன் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள நீங்கள் நேர்மறை எண்ணத்துடன் இருக்க வேண்டும். மகிழ்ச்சியான செய்திகளைப் பெறுவீர்கள். திருமணமாகாதவர்களின் திருமணத்தில் சாதகமான முடிவு எடுக்கப்படும்.
மீனம்: இந்த ராசிக்காரர்கள் இன்று அறிவுபூர்வமாக செயலாற்றுவதன் மூலம் அணைத்து பிரச்சினகளைக் கையாள இயலும். இன்றைய நாள் சாதகமாக்கிக் கொள்வது உங்கள் கையில் தான் உள்ளது. இன்று உங்களுக்கு பணப்பற்றாக்குறை ஏற்படும். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள்.