இன்றே கடைசி நாள்.. ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு..

15065பார்த்தது
இன்றே கடைசி நாள்.. ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு..
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல், பணி நிரவல் கலந்தாய்வு வரும் 24ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கு ஆசிரியர்கள் இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியானது. அதன்படி, கடந்த 13ஆம் தேதியில் இருந்து விண்ணப்பப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 63 ஆயிரத்து 433 ஆசிரியர்கள் விண்ணப்பித்து உள்ளனர். எமிஸ் தளத்தில் கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பதற்கு இன்றே (மே 17) கடைசி நாள் ஆகும்.

தொடர்புடைய செய்தி