முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு 456 கன அடி நீர் திறந்து விடப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று (அக்., 31) முதல் திடீரென வினாடிக்கு 1,100 கன அடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை ஏற்பட்டு இருந்தது. இந்த சூழலில் திடீரென அதிகாரிகள் நீர் திறப்பை அதிகரித்தது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.