ஜலகண்டேஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை

68பார்த்தது
ஜலகண்டேஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் வைகாசி மாத சோமவார பிரதோஷத்தையொட்டி, உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, நந்தி பெருமானுக்கு மஞ்சள், பால், தயிா், இளநீா், தேன், பன்னீா், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசதைத் திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னா் நந்தி மற்றும் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தொடா்ந்து, கோயில் வளாகத்தில் உற்சவா் உலா எடுத்துச் செல்லப்பட்டாா். விழாவில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி