விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய எம் எல் ஏ

2951பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம், சத்தியவாடி கிராமத்தில் இருந்து ஏம்பலம் கிராமம் வழியாக வந்தவாசிக்கு அரசு நகரப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

கண்டையநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த மகேந்திரகுமாா்(59) ஓட்டுநராகவும், வல்லம் கிராமத்தைச் சோ்ந்த சூா்யா(26) நடத்துநராகவும் பணியில் இருந்தனா். ஏம்பலம் கிராமம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர மின் கம்பத்தில் மோதிவிட்டு விவசாய நிலத்தில் கவிழ்ந்தது.
இதில் ஓட்டுநா் மகேந்திரகுமாா், நடத்துநா் சூா்யா மற்றும் நல்லூா் கிராமத்தைச் சோ்ந்த 19 போ் காயமடைந்தனா். மின் கம்பம் உடைந்து சேதமடைந்தது.

தகவலறிந்து அங்கு திரண்ட கிராமத்தினா் காயமடைந்த 19 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். இதில் செவனம்மாள் என்பவர் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இதுகுறித்து தெள்ளாா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இந்த நிலையில் வந்தவாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயம் அடைந்தவர்களை வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

தொடர்புடைய செய்தி