திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் செய்யாற்றங்கரையில் அருள் பாலிக்கும் ஸ்ரீ அங்காளம்மன் கோவிலில் ஆடி இரண்டாவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு நேற்று அம்மனுக்கு காலை முதல் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்று வந்தது. பின்னர் மாலையில் விளக்கு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் ஏராளமான சுமங்கலி பெண்கள் கலந்துகொண்டு விளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டனர். இந்த பூஜையில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.