சித்திரை வசந்த உற்சவம் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி

79பார்த்தது
சித்திரை வசந்த உற்சவம் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் சித்திரை வசந்த உற்சவம் சிறப்புக்குரியது.

அதன்படி, சித்திரை வசந்த உற்சவம் இன்று பந்தக்கால் முகூர்த்தத்துடன் தொடங்குகியது.

அதையொட்டி, இன்று மாலை 4. 30 மணி முதல் மாலை 6 மணிக்குள் கோவில் மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள சம்பந்த விநாயகர் சன்னதி முன்பு பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.

நாளை முதல் வருகிற 23-ந் தேதி வரை தினமும் அருணாசலேஸ்வரருக்கும் உண்ணாமுலையம்மனுக்கும் சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடைபெறும். இரவு நேரத்தில் சாமிக்கு மண்டகபடியும் நடைபெறும்.

விழாவின் நிறைவாக 23-ந் தேதி காலை 10 மணிக்கு ஐயங்குளத்தில் தீர்த்தவாரியும், அன்று இரவு கோபால விநாயகர் கோவிலில் மண்டகபடியும் நடைபெறும். நள்ளிரவு 12 மணி அளவில் கோவில் மூன்றாம் பிரகாரத்தில் தங்க கொடி மரம் முன்பு மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெறும்.

தொடர்புடைய செய்தி