காம்பட்டு திரௌபதி அம்மன் ஆலய துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி.

50பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த காம்பட்டு திரௌபதியம்மன் ஆலயத்தில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.


இந்நிகழ்வில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். போளூர் அடுத்த அடுத்த காம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ திரவுபதியம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா தொடங்கிய நாள் முதல் தினமும் மகாபாரத சொற்பொழிவு மற்றும் தெருக்கூத்து நாடகம், ஜலக்கிரிடை, வில் வளைப்பு, அல்லி அர்சுணா, அர்ச்சுணன் தபசு, விராடபருவம், கிருஷ்ணன் தூது, அரவான் கள பலி, அபிமன்யூ சண்டை, கர்ண மோட்சம், பதினெட்டாம் போர் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றன.

இவ்விழாவின், முக்கிய நிகழ்ச்சியான துரியோதனன் வதம் செய்யும் படுகளம் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி