ஸ்ரீ தேவி பூதேவி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு.

71பார்த்தது
1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி கோயிலில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு.தமிழகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேற்று அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் பக்தர்கள் அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் அதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை மாவட்டம்  அதி காலை முதலே பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.


புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அதிகாலை முதலே சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் நடைபெற்று வந்த நிலையில் வைகுந்த பெருமாளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வைகுந்த பெருமாள் முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


 போளூர், குன்னத்தூர், ரெண்டேரிப்பட்டு, செங்குணம், மாம்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


இறுதியாக கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி