போளூர் அருகே 5 அரிசி ஆலைகளில் வருமானவரி துறையினர் சோதனை.

1565பார்த்தது
போளூர் அருகே 5 அரிசி ஆலைகளில் வருமானவரி துறையினர் சோதனை.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே களம்பூரில் சுமார் 150க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அரிசி ஆலைகளில் அரசியல்வாதிகள் பணம் மற்றும் ஆவணங்கள் பதுக்கி உள்ளதாக புகாரின் பேரில் சென்னை வருமானவரி துறை இணை இயக்குநர் தலைமையில் சென்னை மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் இருந்து சுமார் 24 அதிகாரிகள் 6 கார்களில் விரைந்து களம்பூரில் உள்ள அரிசி ஆலைகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும் களம்பூர் ஆரணி திருவண்ணாமலை சாலையில் உள்ள எஸ். பி. எஸ் அரிசி ஆலையில் வருமானவரி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து களம்பூர் சந்தவாசல் சாலையில் உள்ள ஸ்ரீபாலாஜி மாடர்ன் அரிசி
ஆலை உள்ளிட்ட 5 அரிசி ஆலைகளில் வருமான வரி அதிகாரிகள் மற்றும் பறக்கும்
படையினர் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக அதிகாரிகள் சோதனையில்
ஈடுபட்டனர்.
இதில் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள்; சிக்கியதாக வருமானவரி துறையினர்
வட்டாரங்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி