முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு, திமுக இளைஞரணி சார்பில் சட்டமன்றத் தொகுதிகள் தோறும் கலைஞர் நூலகங்களை திறந்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக
திருவண்ணாமலை தெற்கு மாவட்டக்கழகம் – திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதியில் இளைஞரணி சார்பில் திறக்கப்பட்டுள்ள கலைஞர் நூலகத்தில் இன்று தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இந்நூலகத்தை சிறப்பாக பராமரிக்கின்ற மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களை வாழ்த்து தெரிவித்தார். புத்தகங்களின் வழியே புத்துலகைப் படைத்திட இளைஞர்கள் – மகளிர் – மாணவர்கள் உட்பட திருவண்ணாமலையின் அனைத்துத் தரப்பு பொதுமக்களும் ‘கலைஞர் நூலகத்தை’ பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறினார்.
உடன் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ. வ. வேலு, திமுக மருத்துவர் அணி துணை தலைவர் எ. வ. வே கம்பன், தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.