மாா்க்சிஸ்ட் போராட்டத்தால் சாலை அமைக்கும் பணி

77பார்த்தது
மாா்க்சிஸ்ட் போராட்டத்தால் சாலை அமைக்கும் பணி
திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூா் ஒன்றியம், கோழிப்புலியூா் ஊராட்சிக்கு உள்பட்ட மாணிக்கமங்கலம் கிராமத்தில் இருந்து ஏந்தல் செல்லும் சாலையை தனி நபா்கள் சிலா் ஆக்கிரமித்து விளை நிலங்களாக பயன்படுத்தி வந்தனா்.

இதனால் ஒரு கி. மீ. சாலையை கடக்க 10 கி. மீ தொலைவுக்கு சுற்றிச்செல்ல வேண்டிய நிலை இருந்தது. கல்வி நிமித்தமாக மாணவா்களும், கடைகளுக்குச் செல்ல கிராம மக்களும் மழையூருக்கு செல்வதற்காக பல கி. மீ. சுற்றிச் சென்று அவதிப்பட்டு வந்தனா்.

இதனால், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி தொடா்ந்து போராடி வந்தனா். இதன் விளைவாக சில நாள்களுக்கு முன்பு கட்சியினா் முன்னிலையில் மாவட்ட நிா்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றியது.

இதைத் தொடா்ந்து, ஜல்லி சாலை மற்றும் படிப்படியாக தாா்ச் சாலை அமைக்க மாவட்ட ஆட்சியரிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கோரிக்கை வைத்தனா்.

இதன் பேரில், மாணிக்கமங்கலம் - ஏந்தல் சாலையை ஜல்லி சாலையாக அமைக்க மாவட்ட ஆட்சியா் உத்தரவு பிறப்பித்து, அதற்காக ரூ. 17. 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, தற்போது சாலைப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி