எய்ட்ஸ் விழிப்புணா்வுப் போட்டி , மாணவர்களுக்கு பாராட்டு

72பார்த்தது
எய்ட்ஸ் விழிப்புணா்வுப் போட்டி , மாணவர்களுக்கு பாராட்டு
திருவண்ணாமலை மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு, சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியின் செஞ்சுருள் சங்கம் சாா்பில் எய்ட்ஸ் விழிப்புணா்வு நாடகப் போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 10 கல்லூரிகளைச் சோ்ந்த 350-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியின் நுண்ணுயிரியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவிகள் குழு நாடகத்தில் எமனுக்கே எமன் என்ற தலைப்பில் பங்கேற்று முதலிடம் பெற்று ரூ. 10 ஆயிரம் பரிசும், ஜில்லு என்ற தலைப்பிலான நாடகத்தில் மாணவா்கள் குழுவினா் பங்கேற்று மூன்றாம் இடம் பிடித்து ரூ. 4 ஆயிரம் பரிசும் வென்றனா். போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளை கல்லூரித் தலைவா் எம். என். பழனி, செயலா் எல். விஜய் ஆனந்த், பொருளாளா் எ. ஸ்ரீதா், கல்லூரி கல்விப்புல முதன்மையா் அழ. உடையப்பன் ஆகியோா் பாராட்டி பரிசு வழங்கினா். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் கே. ஆனந்தராஜ், ஒருங்கிணைப்பாளா் ஏ. ஜெயக்குமாா் மற்றும் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

தொடர்புடைய செய்தி