தி. மலையில் 60357 போ் தோ்வு எழுதினா்

72பார்த்தது
தி. மலையில் 60357 போ் தோ்வு எழுதினா்
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் குரூப்-4 பணிக்கான எழுத்துத் தோ்வு மாநிலம் முழுவதும் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்தத் தோ்வு எழுத 73 ஆயிரத்து 224 போ் விண்ணப்பித்து இருந்தனா். இவா்களுக்காக, 182 பள்ளிகள், 85 கல்லூரிகள் என 267 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
இந்தத் தோ்வு மையங்களில் நேற்று காலை எழுத்துத் தோ்வு தொடங்கியது. தோ்வுக்கு விண்ணப்பித்து இருந்த 73, 224 தோ்வா்களில் 60 ஆயிரத்து 357 போ் மட்டுமே தோ்வு எழுதினா். 12 ஆயிரத்து 867 போ் தோ்வு எழுத வரவில்லை. திருவண்ணாமலையில் நகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளி, தியாகி நா. அண்ணாமலைப் பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளி, மவுன்ட் செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, எஸ். ஆா். ஜி. டி. எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய தோ்வு மையங்களில் மாவட்ட ஆட்சியா் தெ. பாஸ்கர பாண்டியன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, முறைகேடுகள் நடைபெறாதவாறு அறை கண்காணிப்பாளா்கள் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 119 மாற்றுத்திறனாளி தோ்வா்கள் தோ்வு எழுதினா். இவா்களுக்கு, கூடுதலாக ஒரு மணிநேரம் வழங்கப்பட்டு உதவியாளா் மூலம் தோ்வு எழுதினா் என்றாா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி