வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 பேர் பலத்த காயம்

55பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரிப்பாளையம் ஊராட்சியில் வசித்து வரும் சங்கர் என்பவர் தனது பழைய வீட்டை இடிக்கும் பணியினை மேற்கொண்டுள்ளார் அப்போது எதிர்பாராத விதமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பணியில் ஈடுபட்ட 6 பேர் பலத்த காயமடைந்தனர் காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்
பக்கிரிப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் சங்கர் இவர் கூலி வேலை செய்து வருகிறார் இவருக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அரசின் தொகுப்பு வீடு வழங்கப்பட்டுள்ளது வீடு பழுதடைந்த நிலையில் தற்போது வீட்டை இடித்து விட்டு புதிய வீடு கட்ட வீட்டை இடிக்கும் பணியினை மேற்கொண்டுள்ளார் இதற்காக அதே பகுதியை சேர்ந்த பெரியதம்பி , கோவிந்தராஜ் , சதீஷ் குமார், ராஜா, ரஞ்சித் உள்ளிட்டோர் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
வீட்டின் மேற்கூரையை இடிக்க முயன்றபோது திடிரென மேற்கூரை முழுவதும் வேலை செய்தவர்கள் மீது விழுந்துள்ளது இதில் கோவிந்தராஜ் மற்றும் பெரியதம்பி ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் மேலும் நான்கு பேர் பலத்த காயத்துடன் செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து செங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி