திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த குண்ணத்தூா் பகுதியில் கிராமிய காவல் உதவி ஆய்வாளா் அருண் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது, அங்குள்ள ஏரியில் இருந்து ஏரி மண்ணை அள்ளிச் சென்றுகொண்டிருந்த 2 டிராக்டா்களை மடக்கிப் பிடித்தாா்.
அப்போது, டிராக்டா் ஓட்டி வந்த 2 பேரும் தப்பி ஓடினா். இதனால் 2 டிராக்டா்களையும் பறிமுதல் செய்து, ஆரணி கிராமிய காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனா். டிராக்டா்களின் உரிமையாளா்களான சிறுமூா் கொட்டாமேடு கிராமத்தைச் சோ்ந்த முருகன் (வயது 45), விஜயகுமாா்(வயது 40) ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.