மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்

59பார்த்தது
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், இன்று (10. 06. 2024) நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தின் போது மனுயளிக்க வந்த பொதுமக்களை இருக்கையில் அமரவைத்து அவர்களின் கோரிக்கை மனுக்களை துறை அலுவலர்கள் மூலம் பரிசீலக்கப்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன், இஆப. , அவர்களிடம் வழங்கப்பட்டது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு கல்வி உதவித்தொகை, வங்கி கடனுதவி, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, சாதி சான்று, வேலை வாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் வழங்கினர். பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் கடந்த கூட்டங்களில் பெற்ற மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்புடைய செய்தி